• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்க மு. ஞானமூர்த்தி கோரிக்கை..,

ByT. Balasubramaniyam

Mar 5, 2026

உலக திருக்குறள் மாநிலத் தலைவர் முனைவர் மு ஞானமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கடந்த சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000 வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால் இதுவரை வழங்கவில்லை. இதனால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். மத்திய அரசின் விலையான (FRP) ரூ. 3290, மாநில அரசின் பரிந்துரை விலை (SRP) ரூ. 349 ம் சேர்த்து டன்னுக்கு ரூ. 3,639.50 தான் வழங்கப்படுகிறது. சில தனியார் ஆலைகள் மட்டும் ஊக்கத் தொகையாக ஏக்கருக்கு ரூ. 10 000 மும் பதிவு இல்லாத கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4750 வரை கொடுக்கிறார்கள். இந்தப்பாகுபாட்டால் கரும்பு விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து மாற்றுப் பயிரும் செய்யமுடியாமல் விளைநிலத்தை உழுவதற்குக் கூட மனம் இல்லாமல் கரும்பாகப் போடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக அரசு கரும்பு விவசாயிகளை அலட்சியமாகக் கருதினால் அதன் பலனை வரும் சட்டமன்றத் தேர்தலில் காண்பிப்பார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த கரும்புக்கு டன்னுக்கு ரூ. 4000, 2025-2026 ம் ஆண்டு கரும்பு பருவத்திற்கு வழங்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.