• Sun. May 12th, 2024

கோவையில் உலக சிறுநீரக நோய் தின நிகழ்ச்சி

BySeenu

Mar 15, 2024

சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் அதிகரிக்கும் நடவடிக்கைகளை மருத்துவர்களுடன் இணைந்து ரோட்டரி சங்கங்கள் முன்னெடுக்க உள்ளதாக கோவையில் நடைபெற்ற உலக சிறுநீரக நோய் தின நிகழ்ச்சியில் மருத்துவர்கள் மற்றும் ரோட்டரி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

உலக சிறுநீரக தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது..இந்நிலையில் சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ரேஸ் கோர்ஸில் உள்ள காஸ்மாபாலிடன் கிளப் அரங்கில் நடைபெற்றது.
கோவை கிழக்கு ரோட்டரி சங்கம்,கோவை மிட் டவுன் ரோட்டரி சங்கம் ,கோவை இன்ஃப்ரா ரோட்டரி சங்கம் ஹான்ஸ் கிளப் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை கிட்னி சென்டர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் டாக்டர் ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறுநீரக நோய்களின் பாதிப்பு மற்றும் அவற்றை வராமல் தடுக்க வேண்டிய உணவு பழக்கங்கள்,உடற்பயிற்சியின். அவசியம் குறித்து பேசினார்.
விழாவில் ரோட்டரி சங்கங்களின் தலைவர்கள் ஈஸ்வரன், டாக்டர் நாகராஜ் ,காமராஜ்,,யோக பிரியா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்..
முன்னதாக கோவை கிட்னி சென்டர் நிறுவனரும் இயக்குனருமான டாக்டர் ராமலிங்கம் கோவை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் ஈஸ்வரன் மற்றும் பிரேம்குமார் சஞ்சீவி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு, கோவையில் ரோட்டரி சங்கங்கள், கிட்னி சென்டர் மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
சிறுநீரகத்தை நாம் பாதுகாக்க வேண்டும் சிறுநீரக நோய் வராமல் தடுக்க சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அதேபோன்று ரத்தத்தின் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்இந்த இரண்டு முறையும் சிறுநீரக பாதிப்புகளை மிகவும் குறைக்கும்..மேலும், பொதுமக்கள் வலி மாத்திரைகளை தாமாக உட்கொள்ளக் கூடாது டாக்டரின் அறிவுரைப்படி தான் மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் சிறுநீரக விழிப்புணர்வு என்பது மக்களிடம் குறைவாக காணப்படுகிறது..இனி வரும் காலங்களில்,ரோட்டரி சங்கங்கள் சிறுநீரக நோய்கள் குறித்த விழிப்புணர்வுகளை அதிகம் ஏற்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் டாக்டர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *