• Sun. Apr 28th, 2024

சிறுதானிய ஆண்டாக 2023 உலக சுகாதார மையம் அறிவிப்பு…

உலக சுகாதார மையம் நடப்பு ஆண்டு 2023 யை சிறுதானிய ஆண்டாக அறிவித்தின் அடிப்படையில் அதனை நாட்டு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பல்வேறு விளம்பர உத்தியை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாணவ சமுகம் பாட்டு மற்றும் பேச்சுப் போட்டி, நடனப் போட்டி, சைக்கிள் பந்தையம், மீனவ இளைஞர்கள் மத்தியில் கடலில் படகுப்போட்டி, ஓரங்க நாடகம், என்கிற அடிப்படையில், கன்னியாகுமரியில் இன்று (செப்டம்பர்_15)ம் நாள் சிறு தானிய உணவின் அவசியம்,பலன் பற்றிய வாசகங்கள் அடங்கிய பதகைகளை கன்னியாகுமரியில் உள்ள மணியாஸ் கேட்டரிங் கல்லூரி மாணவ,மாணவிகள், தாதியர் பயிற்சி மாணவிகள், பொறியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம்.

கன்னியாகுமரி கடற்கரையில் சூரியன் உதிக்கும் பகுதியில் இருந்து சூரிய அஸ்தமனம் பகுதி வரை பதகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.

கன்னியாகுமரி கடற் கரை பகுதியில் நடந்த சிறுதானிய அவசியம் பற்றிய ஊர்வலத்தை பன் மொழி சுற்றுலா பயணிகள் பார்த்தனர் . சுற்றுலா பயணிகள் இடம் 2023-ம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள தகவலுடன்,சிறுதானிய உணவின் அவசியம் பற்றிய தகவல்கள்.தமிழ், ஆங்கிலம் மொழிகளில் உள்ள துண்டறிக்கைகளை கொடுத்தனர்.

சிறுதானிய அவசியம் மாணவர்கள் ஊர்வலத்தை.ஆர்டிஓ சேதுராமாலிங்கம் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி முனைவர் செந்தில் குமார்,மணியாஸ் கேட்டரிங் கல்லூரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *