குமரி மாவட்டத்தில் தி. மு. க.,வின் தேர்தல் கால வாக்குறுதி, பெண்களுக்கு ரூ.1000_ம் உதவி தொகை என்ற அறிவிப்பை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 115_வது பிறந்த தினத்தில், .அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்த நிகழ்வுக்கு பின்பே குமரி மாவட்டத்தில் திருவிதாங்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட’வட்டம்’ பகுதியில் பெரிய நாயகி சமூக நலக்கூடத்தில் 2000_ம் மகளிருக்கு மாதம் உரிமைத் தொகையான ரூ.1000_க்கான வங்கி அடையாள அட்டை வழங்கும் விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கலைஞர் மகளிர் உரிமை அட்டையை தமிழக அரசின் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஆர். ராஜேஷ் குமார், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
திட்டம் தொடங்கிய அதே தினத்தில் வங்கிகள் கணக்கில் ரூ.1000.00வரவு வைத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பயனாளிகள் அவர்களது நன்றியை திறந்த வெளியில் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொண்டதை காணமுடிந்தது.