• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

உலக சுற்றுச்சூழல் தினம் இந்திய பெருநகரங்களில் சென்னை தான் வெப்பம் மிகுந்த நகரம்(நரகம்)

ByAlaguraja Palanichamy

Jun 6, 2024

Urban Lab of the Centre for Science and Environment செய்த ஆய்வில்,2011ம் ஆண்டிற்குப் பின்,இந்திய பெருநகரங்களில்,சென்னையில் தான் சராசரி கோடைக்கால வெப்பம் மிக அதிகமாக 37.4°C என்ற அளவில் உள்ளது.

சென்னை,  கடற்கரைக்கு அருகில் உள்ளதால்,கோடை காலத்தில் ஒப்பீட்டு ஈரப்பத அளவு(Relative Humidity) அதிகம் இருப்பதால், இந்திய பெருநகரங்களிலேயே, சென்னையில் தான் வெப்ப குறியீடு(Heat index)அதிகமாக இருப்பதும்,அதனால் சென்னையின் வெப்பக் குறியீடு 6.9°C என்ற அளவில் அதிகமாக இருந்து மக்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதும் கள உண்மையாக உள்ளது.

இந்த ஆய்வில்,கோடைக்கால வெப்பம் 2001-11, 2014-23 கால கட்டத்தில், டெல்லி,மும்பை,கொல்கத்தா,ஹைதராபாத்,பெங்களூரு,சென்னை போன்ற பெருநகரங்களில் ஒப்பிடப்பட்டது.(2011-23 இடைப்பட்ட காலம்.)

கோடைக் காலத்தில் சென்னையின் சராசரி வெப்பம் கடந்த 10 ஆண்டுகளில்,0.4°C அதிகரித்துள்ளது.

 2001-10-  2014-23 இடைப்பட்ட காலத்தில் ஒப்பீட்டு ஈரப்பதம் 5% அதிகரித்துள்ளது.  மார்ச்-ஏப்ரல் 2024ல் சராசரி வெப்பம்,2014-23 வருடத்தை ஒப்பிடுகையில்,1°C என அதிகரித்துள்ளது.

ஒப்பீட்டு ஈரப்பதத்தின் காரணமாக,சென்னையின் வெப்பக் குறியீடு சராசரியாக 6.3°C அதிகரித்துள்ளது. சென்னையின் வெப்பக் குறியீடும்(Heat Index)5%மேல் அதிகரித்துள்ளது.

தற்போது 41°Cக்கு அதிகமான வெப்பக் குறியீட்டு நாட்கள்,2001-10 வருடங்களை ஒப்பிடுகையில்,3 மடங்கு அதிகரித்துள்ளது. மழைக்காலம்(Monsoon),மழைக்காலத்திற்கு முந்தைய காலத்தில்,2°C வெப்பக் குறியீடு உயர்ந்து மக்களுக்கு அசௌகர்யம் அதிகரித்துள்ளது.

வெப்பக் குறியீட்டால் ஏற்படும் அசௌகர்யம் மழைக்காலம்,அதற்கு முந்தைய காலத்தில் உள்ள இயல்பான வேறுபாடு சென்னையில் மறைந்து வருகிறது. இந்த 2 காலங்களில் ஏற்படும் அசௌகர்யம் அதிகரித்தும்,ஒரே மாதிரியாகவும் உள்ளது.

இரவு நேரங்களில்,நிலப்பரப்பு வெப்பம் குறைவதும் தற்போது நிகழ்வதில்லை. வெப்பம் குறைவது 5% நடக்காமல் போகிறது. சென்னையில்,நகர்ப்புற வெப்பத் தீவு (Urban Heat Island Effect)பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னை நகரின் மைய வெப்பம் பகல் நேரத்தில்,சுற்றுப்புற புறநகர் பகுதிகளை விட 0.8°C அதிகமாகவும்,இரவு நேரங்களில் 0.9°C அதிகமாகவும் உள்ளது.

வெப்ப குறியீடு-    நகரம்

36.5° C                    -கொல்கத்தா

34.3° C                    -மும்பை

32.2° C                    -டெல்லி

29.3°C                     -ஹைதராபாத்

26.9°C                     -பெங்களூரு

சென்னையிலோ,அது மிக அதிகமாக 37.4°C என  உள்ளது. சென்னையின் வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம்.

கட்டடங்களின் பரப்பு(Built-up area) கடந்த 20 ஆண்டுகளில் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 2003ல் 30.7%இருந்த கட்டடப்பரப்பு,2023ல் 73.5%ஆக அதிகரித்துள்ளது.

அதே காலகட்டத்தில்,சென்னையின் பசுமை பரப்பு 34%ல் இருந்து,20.3%ஆக குறைந்துள்ளது. இந்தியாவிலேயே,பசுமை பரப்பு மிக அதிகமாக சென்னையில் குறைந்துள்ளது.

கொல்கத்தாவில் கட்டடப்பரப்பு 10% மட்டுமே உயர்ந்துள்ளது. ஹைதராபாத்தில், கடந்த 20 ஆண்டுகளில் பசுமை பரப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. 

சென்னையின் “வளர்ச்சி”என்பது அதன் பசுமை பரப்பு + நீர்நிலைகளை காவு வாங்கியுள்ளது என்பதே வேதனையான உண்மை. சென்னையின் பசுமை பரப்பு 12% என்ற அளவில் உள்ளது. 

பெங்களூரு,கொல்கத்தா,மும்பை,டெல்லி போன்ற இடங்களில் அது 20%ஆக உள்ளது.  ஐரோப்பிய நாடுகளில்,நகரங்களில் பசுமை பரப்பு 30% ஆகவும்,சிங்கப்பூரில்,அது 47%ஆகவும் உள்ளது.

சென்னையின் ஒப்பீட்டு ஈரப்பதம் அதிகம் என்பதால்,வியர்வை வாயிலாக உடல் குளிர்ச்சி ஏற்படுவது தடைப்படுகிறது.

சென்னையின் நகர்ப்புற வெப்பத்தீவு பாதிப்பிற்கு (Urban Heat Island Effect)இங்கு பயன்படுத்தப்படும் குளிர்விப்பான்(Ac)+பிற இயந்திரங்கள் வாயிலாக கழிவாக வெளியேறும் வெப்பமும் முக்கிய காரணமாக உள்ளது. 

கோடைக் காலத்தில்,35-50% ஆற்றல் பயன்பாடு குளிர்விப்பான்களை இயக்க சென்னையில் பயன்படுத்தப்படுகிறது. Ac பயன்பாட்டால் உள்ளே வெப்பம் குறைந்தும்,வெளியே வெப்பம் அதிகமாவதும் தவிர்க்க முடியாததால், வெளிவெப்பம் சென்னையில் அதிகமாகிறது.

 குளிர்விப்பான்களை 25°C அளவில் மட்டும் இயக்குவதும்,குளிர்விப்பான்களின் திறனை அதிகப்படுத்துவதும்(Energy Efficient)நகர்ப்புற வெப்பத் தீவு பாதிப்பை 1.5°C வரை குறைக்க உதவும். 

கட்டடங்களின் வடிவமைப்பு,பசுமை கட்டடப் பொருட்களின் பயன்பாடு மூலமும்,(Green building codes) நகர்ப்புற வெப்பத்தீவு பாதிப்பை 3°C வரை குறைக்க முடியும். 

சென்னையின் பசுமை பரப்பை 12%ல் இருந்து 25% ஆக உயர்த்தினால்,நகர்ப்புற வெப்பத்தீவு பாதிப்பை 1.5°C வரை குறைப்பதோடு,அவை 10% கார்பன் உமிழ்வையும் உள்வாங்கும் என்பதால், சென்னை மாஸ்டர் பிளான் 3ல் பசுமை பரப்பை அனைத்து பகுதிகளிலும் அமைக்க திட்டங்கள் தேவை.

Sustainable Urban Development by UN Habitat பரிந்துரையின் படி அனைத்து குடிமகன்களின் வீட்டிலிருந்து 400 மீட்டர் தொலைவில்,பசுமை பரப்பு இருக்க வேண்டும்.  வீட்டின் மேற்கூரையில் வெள்ளை நிறம் இருப்பதன் மூலம் வெப்பத்தை 1-2°C வரை குறைக்க முடியும். 

அண்ணா பல்கலைக் கழகம் மேற்கொண்ட ஆய்வில்,தமிழகத்தில் வெப்பஅலைகளின் தாக்கம்,இனி வரும் காலங்களில் 2 மடங்காக உயரும் எனத் தெரியவந்துள்ள நிலையில்,தமிழக திட்டக் கமிசன் 2023ல் அரசிற்கு வெப்ப பாதிப்பை கட்டுப்படுத்த அறிக்கை அளித்தும்,அரசு அதை பொதுவெளியில் வைக்கவில்லை.

Climate Action Plan, சென்னையில் இருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்கும் Heat Action Plan ஐ தயாரித்து விரைவில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 

சில வெப்ப வரைபடங்களின் ஆய்வுப்படி, சென்னை புறநகர் பகுதிகளைக் காட்டிலும் சென்னையின் வெப்பம் 2-4°C வரை அதிகரித்து காணப்படும் எனத் தெரியவந்துள்ளது.

(புறநகர் பகுதியில்,40°C வெப்பம் இருந்தால்,சென்னையின் மையப் பகுதியில் வெப்பம் 42-44°C வரை இருக்க முடியும்.)

இந்தியாவில் வெப்பஅலை குறித்தான விளக்கம்- கடலோரப் பகுதிகளில்,அதிகபட்ச வெப்பம் 37°Cக்கு அதிகமாக இருந்தாலோ,அல்லது இயல்பான வெப்பத்தை விட 4.5°C அதிகமாக இருப்பது.

சுருக்கமாக, சென்னயின் வெப்பக் குறியீடு இந்தியாவிலேயே பெருநகரங்களில் அதிகமிருப்பதை கருத்தில் கொண்டு சென்னையில் தேவையான மாற்றங்களை (ஆலைக் கழிவுகளை கட்டுப்படுத்தி காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவது பசுமைக் குடி வாயுக்களின் அளவை குறைத்து,வெப்ப பாதிப்பை கட்டுக்குள் வைக்க உதவும்.) கொண்டு வந்து மக்களை காப்பது,இந்தியாவின் பிற இடங்களிலும்,வெப்ப உயர்வை கட்டுப்படுத்த முன்மாதிரியாக இருக்கும் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். சமீபத்தில் சென்னையில் ஒரு நாள் மின்தேவை வெப்பஅலையின் காரணமாக 100 மில்லியன் யூனிட்டுகளை தாண்டியுள்ளது.!

நெருக்கமான கட்டடங்களும்,தார் சாலைகளும் வெப்பத்தை உயர்த்தும் என்பதால்,பசுமை பரப்புகளை அதிகமாக உருவாக்குவதே முக்கிய செயல்பாடாக சென்னையில் இருக்க வேண்டும்.