• Thu. Sep 3rd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…

Byகாயத்ரி

May 24, 2022

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு அமர்வில் பேசிய தலைவர்கள் இந்தியாவுக்கு புகழாரம் சூட்டினர். மேலும் வெல்கம் அறக்கட்டளை இயக்குனர் ஜெரிமி பரார், “கவி” என்ற தடுப்பூசி கூட்டணி தலைமை செயல் அதிகாரி சேத் பெர்க்லி, மாடர்னா தலைமை செயல் அதிகாரி ஸ்டீபன் பான்சல் ஆகியோர் பங்கேற்று பேசினர். அத்துடன் உரிய நேரத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தீவிரப்படுத்தி உலகம் முழுதும் தடுப்பூசியை விநியோகித்ததாக இந்தியாவுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். தடுப்பூசி சமத்துவத்தை உறுதிசெய்யவும், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் இந்திய மாடலை அனைவரும் பின்பற்றவேண்டும் என அவர்கள் கூறினர். இந்த மாநாட்டில் நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் பேசியதாவது, உலகின் தடுப்பூசி தலைநகராக இந்தியா உருவெடுக்கும் என்று தெரிவித்தார்.