• Sat. May 4th, 2024

இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வு

ByA.Tamilselvan

May 24, 2022

இலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.
இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் இல்லை என அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில்விக்ரமசிங்கே அறிவித்திருந்தார்.இந்நிலையில் இலங்கை திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு வந்து கொண்டு இருந்த அன்னிய செலாவணி வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இலங்கையின் பணம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரி பொருள் பற்றாக்குறை நிலவுகிறது.
இலங்கையில் இன்று பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
பெட்ரோல் விலை 24.3 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.420க்கு விற்பனையானது.இதே போல் டீசல் விலையில் 38.4 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் டீசல் ரூ.400 ஆக உள்ளது.கடந்த மாதம் ஏப்ரல் 19-ந் தேதிக்கு பிறகு 2-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல் வழங்கியது.இந்தியா அனுப்பிய 40 ஆயிரம் டன் பெட்ரோல் இலங்கை சென்றடைந்தது. இந்தியா தொடர்ந்து 1,20,000 டன் டீசல் மற்றும் 40 ஆயிரம் டன் பெட்ரோல் வினியோகம் செய்தது. பழைய பாக்கியை கொடுக்க இலங்கையிடம் பணம் இல்லாதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது.
பொருளாதார நெருக்கடி ,எரிபொருள் பற்றாக்குறை என பல மாதங்களாக தவித்துவரும் இலங்கையில் தற்போதைய வரலாறு காணத பெட்ரோல் விலை உயர்வு சூழ்நிலை மேலும் மோசமாக்கும் என தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *