• Fri. Mar 29th, 2024

வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் -டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்

ByA.Tamilselvan

Nov 2, 2022

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வாகன மாசுபாட்டை குறைக்க, முடிந்த வரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் சமீப நாட்களாக காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இதையடுத்து, காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து, தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவுள்ளதாக தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை, இன்று (நவ.2-ம் தேதி) பதிவாகியுள்ள காற்று மாசின் அளவீட்டில் என்சிஆர் பகுதியில் காற்றின் தரக் குறியீடு அளவு 406 என உள்ளது. இதனால் டெல்லி, காற்று மாசு அளவீடுகளில் 039 கடுமையான பிரிவில் உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மாநிலத்தின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “வாகன மாசுபாட்டை குறைக்க, முடிந்தவரை வீட்டில் இருந்து பணிபுரியுங்கள்” என, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *