• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…

Byகாயத்ரி

May 28, 2022

ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் எங்கோ ஒரு பகுதியில் அதிசயங்கள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு குழந்தை சிரித்த முகத்துடன் பிறந்திருக்கிறது.

அதாவது, அந்த குழந்தையின் வாய் பகுதியின் ஒரங்கள் ஒட்டாமல் இருக்கிறது. எனவே, அந்த குழந்தை எந்த நேரமும் சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற வகையில் முகம் அமைந்திருக்கிறது. Bilateral Microstomia என்னும் அரிய நோயினால் நிரந்தர புன்னகையுடன் பிறந்த குழந்தையின் படம் மிகவும் வைரலாகி வருகிறது. படத்தில் காணப்படும் அந்த குழந்தை, பிறவிக் கோளாறு காரணமாக, முகத்தில் புன்னகை நிரந்திரமாகி விட்டது.இவ்வாறு அதிசயமான முகத்துடன் பிறந்திருக்கும் இந்த குழந்தையின் புகைப்படங்கள், தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.