
மகளிர் தின விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. டாக்டர் சேதுராமன், டாக்டர் குரு சங்கர், நகைச்சுவை மன்ற தலைவர், செயலர், பட்டிமன்ற நடுவரும், பேராசிரியரும், நடிகருமான முனைவர் கலைமாமணி கு.ஞானசம்பந்தன், நகைச்சுவை மன்ற அமைப்பு செயலாளர் வி.எம்.பாண்டியராஜன் ஆகியோர் நல்லாசியுடன் சிறப்பு விருந்தினர் விருதுநகர் ஜெயலட்சுமி அவர்களுக்கு திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் பொன்னாடை போர்த்தி மகளிர் தின வாழ்த்துக்கள் கூறினார்.

உடன் நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, கவிஞர் லட்சியம் சிதம்பரம், ஆசிரியர் மோசஸ் மங்கள் ராஜ், மல்லிகா, முத்துகுமாரி, பட்டி மன்ற பேச்சாளர் சிவசங்கரி, ஸ்ரேயா மற்றும் நகைச்சுவை மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகைச்சுவை கூறிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெண்களால் நடத்தப்பட்ட பட்டிமன்றம் நடந்தது. அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
