• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்படும்- அரசாணை வெளியீடு

Byமதி

Nov 26, 2021

ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் தமிழக அரசின் திட்டமே பெண்களுக்கு 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற 38,800 பெண்களுக்கு, ரூ.73.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா 5 செம்மறியாடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படுவதற்கான அரசாணையை
ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்,
ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, பயனாளிகளில் குறைந்தது 30 சதவீதம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தகுதி வாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.