விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்,ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் தேசபந்து மைதானத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சிறப்புரை ஆற்றினார், விருதுநகர் நகர்மன்ற தலைவர் S R S R மாதவன் தலைமை வகித்தார், அவைத்தலைவர் வே. தங்கராஜ் முனிலை வகித்தார் .சிறப்பு பேச்சாளராக கம்பம் செல்வேந்திரன் உரையாற்றினார்.அவர் பேசுகையில் ” இந்தி மொழியை கட்டாய மொழியாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது, ஆனால் பேரறிஞர் அண்ணா,கலைஞர் அவர்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வந்தனர்.இப்போது நமது தமிழக முதல்வர் எதிர்த்து வருகின்றார், ஒருமுறை சங்கராச்சாரியார் வள்ளலார் அவர்களிடம் சமசுகிருதம் தான் உலகின் முதல் மொழி அதுவே தாய் மொழி என்றார்.
அதற்கு சமஸ்கிருதம் தாய் மொழி என்றால் எங்கள் தமிழ் மொழி தந்தை மொழி ” என்று பதில் கூறினார் என்று கம்பம் செல்வேந்திரன் பேசினார். இக்கூட்டத்தில் மதுரை S. பாலா, விருதுநகர் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் KG ராஜகுரு, ஆகியோர் கலந்து கொண்டனர்