• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்கள்..,

Byமுகமதி

Feb 16, 2026

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த நபர்களில் அதிகமான பெண்கள் இன்று மகளிர் உரிமை தொகை குறித்த மனுக்கள் வாங்கும் பிரிவில் இன்று நிறைய பேர் வந்து மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு அரசு மகளிர்க்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது ஒரு புறம் இருக்க, தகுதி உள்ள பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மறு அறிவிப்பு வந்து அதன் அடிப்படையில் மகளிருக்கு தொகை வழங்கப்பட்டு வந்தது. அந்தத் திட்டத்தில் பயன்படும் மகிழ்ச்சியடையும் மகளிர் ஒரு புறம் என்றால் அனைவருக்கும் தருகிறோம் என்று வாக்குறுதியை கொடுத்துவிட்டு எங்களை எல்லாம் தகுதி இல்லாதவர்கள் என்று அறிவித்ததால் நாங்கள் வேதனையில் இருக்கிறோம் என்று பெண்கள் பலரும் தெரிவித்து வந்த நிலையில் திமுக அல்லாத மாற்று கட்சியினர் குறிப்பாக அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் அந்த பிரச்சனையை பிரச்சார யுக்தியாகவும் மேடைப் பேச்சாகவும் எடுத்துக்கொண்டு பேசி வந்தனர்.

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மகளிர் உரிமைத் தொகை வாங்கும் அனைத்து பெண்களின் வங்கி கணக்குகளிலும் ஒரே நாளில் குறிப்பாக ஒரு கோடியே 31 லட்சம் பேருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி விட்டது. அதிமுக பாஜக போன்ற கட்சிகளின் சார்பில் இதையே ஒரு விமர்சனமாக ஏற்றுக் கொண்டு விட்ட நிலையிலும் பணத்தை திமுக அரசிடம் வாங்கிக் கொள்ளுங்கள் வாக்களிப்பதை எங்களது கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்ற பிரச்சாரத்தையும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த நிலையில் தான் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்போது இப்போதுள்ள மகளிர் உரிமைத்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பை கேட்டதால் இப்போது மகளிர் ஆங்காங்கே மனுக்கள் கொடுக்க தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் தான் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த அதிகமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை குறித்த மனுக்கள் வாங்கும் பிரிவுக்கு வந்து குவிந்து மனுக்களை கொடுத்து வருகின்றனர். தேர்தல் அறிவிப்பு தேதி வந்து விட்டால் அந்த மனுவையும் கொடுக்க முடியாது என்பதால் விரைந்து வந்து கொடுத்து கொண்டிருக்கின்றனர்.