• Thu. Jul 2nd, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

பெண்கள் துணிச்சலுடன் சாதிக்க முன்வர வேண்டும் கருப்பையா எம்.எல்.ஏ., அறிவுரை..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாடிப்பட்டி வட்டார கவியரசு கண் ணதாசன் இலக்கிய பேரவை சார் பாக கண்ணதாசன் 99வது பிறந்த நாள் விழாவையொட்டி அரசு பொது த்தேர்வில் 10, 12 வகுப்புக ளில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவமாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் திலகவதி தலைமை தாங்கினார். திருவள்ளுவர் இலக்கிய மன்ற பொருளாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், இலக்கியப் பேரவை நிர்வாகிகள் வழக்கறிஞர் அழகேசன், கச்சைகட்டி பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் பிரேமா வரவேற்றார். இந்த விழாவில் கருப்பையா எம்.எல்.ஏ .,மாணவ மாணவிக ளுக்கு பரிசுகள் வழங்கி பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-இந்தப் பூவுலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி மறைகிறார்கள் அனைவரும் மக்கள் மனதில் நிற்பதில்லை நிலைப்பதில்லை ஆனால் தன்னலம் இன்றி பொதுநலத்துடன் வாழ்பவரும் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்பவர்களும் பூ உடல் மண்ணை விட்டு மறைந்தாலும் நிலைத்து நின்று என்றென்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

அதுபோல எத்தனையோ கவிஞர்கள் புலவர்கள் தங்கள் கவித்திறன் மூலம் இலக்கிய உலகில்முடிசூடா மன்னர்களாக இருந்து வந்தாலும்மக்களின் வாழ்வியலை பாடிய ஒரே கவிஞர் கண்ணதாசன் மட்டும் தான்பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து நிலைகளைப் பற்றியும் பாடியவர் அதனால் தான் அவர் கவியரசு என்று அழைக்கப்படுகின்றார். மேலும் மாணவர்கள் ஆகிய நீங்கள் பெற்றோர் சொல்படி நடக்க வேண்டும்.ஆசிரியர் சொற்படி படிக்க வேண்டும்.எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் துணிந்து நின்று அதை சந்திக்க வேண்டும்.எதிலும் தன்னம் பிக்கை விடாமுயற்சி இருக்க வேண்டும்.எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்ற வள்ளுவரின் வாய்மொழி படிஎந்த ஒரு பொருள் பற்றி யார் கூறினாலும் அதன் உண்மை தன்மைஎன்ன என்பதை நம் அறிவு கொண்டு விளக்க வேண்டும்.

பெண்கள் ஒவ்வொரு வரும் துணிச்சலுடன் சாதிக்க முன்வர வேண்டும்.மேலும் இந்த பள்ளியின் அடிப்படைத் தேவை என்ன என்பதை அறிந்து அதை நான் நிறைவேற்றி தருவேன் இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில் உடனுக்குடன் கவிதை படித்த மாணவிகளுக்கு ஊக்கப் பரிசு வழங்கினார். இதில் கணினி ஆசிரியர் கார்த்திக்,உடற்கல்வி ஆசிரியர் சந்திரமோகன்,முன்னாள் மாணவர்கள் தமிழன் தாமு பசுமணியன் உள்பட ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை செய்து முடிவில் கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன்.பனகல் பொன்னையா நன்றி கூறினார்.