• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

கோவையில் பெண்கள் ஊர்வலம்-மறியல்

ByA.Tamilselvan

Sep 28, 2022

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடத்தில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
150-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவியது. போலீசார் அங்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கோட்டை மேடு எச்.எம்.வி.ஆர். வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அங்கு கண்டன கோஷங்களை எழுப்பினர். மாநகர துணை கமிஷனர் மாதவன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.