• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அரசு மதுபான கடையை அகற்றக் கோரி பெண்கள் கோரிக்கை..,

ByKalamegam Viswanathan

Jul 21, 2026

மதுரை சோழவந்தான் அடுத்து உள்ள தென்கரை முள்ளி பள்ளம் மன்னாடிமங்கலம் குருவித்துறை ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

மன்னாடிமங்கலம் கிராமத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த பெண்கள் மன்னாடி மங்கலத்தில் உள்ள அரசு மதுபானக்கடையால் பலரது வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாகவும் பல பெண்கள் கணவனை இழந்தும் பிள்ளைகள் தங்கள் தந்தையை இழந்தும் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக கூறும் தாய்மார்கள் தங்கள் மகன்களின் வாழ்க்கை சீரழிவதை கண்முன்னே பார்த்து கவலைப்படுவதாகவும் கூறுகின்றனர்.

ஆகையால் பொதுமக்கள் மற்றும் பலரது குடும்பங்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குறியாக்கும் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் இந்த பெண்கள் கூறுகையில் தங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள் ஊரில் அருகிலேயே மதுக்கடை இருப்பதால் அடிக்கடி மதுக்கடைக்கு சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபடுவதாகவும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருப்பதால் தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் கூறி வேதனை அடைந்தனர். விவசாய நிலங்களுக்கு மத்தியில் மதுபான கடை இருப்பதால் விவசாய வேலைகளுக்கு செல்லும் பெண்களுக்கு மது பிரியர்களால் இடையூறு ஏற்படுவதாக கூறுகின்றனர்.

மேலும் மது குடித்த பின்பு காலி மது பாட்டில்களை விவசாய நிலங்களுக்குள் போட்டு செல்வதால் விவசாயம் பாழ்படுவதாக கூறும் பெண்கள் விவசாய வேலை செய்யும் கூலி தொழிலாளர்களுக்கு உடைந்த காலி மது பாட்டில்கள் மூலம் காயங்கள் ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மன்னாடிமங்கலத்தில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் உள்ள இந்த மதுபான கடையால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக கூறும் பயணிகள் பொதுமக்கள் ஏற்கனவே பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த ஐயப்பன் நாயக்கன்பட்டி அரசு மதுபான கடையை மூடியது போல் இந்த மதுபான கடையையும் மூட வேண்டும் என்று கூறினர்.

சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரின் நன்றி தெரிவிக்கும் சுற்றுப்பயணத்தின் போது மதுக்கடையை அகற்ற கோரி பெண்கள் வைத்த கோரிக்கையால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.