• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

கணிதத்தில் பெண்களே புலிகள்.. யுனெஸ்கோ ஆய்வு அறிக்கை…

Byகாயத்ரி

Apr 29, 2022

ஒவ்வொரு ஆண்டும் யுனெஸ்கோ உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் எடுக்கப்படும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும். இந்த ஆண்டும் அப்படி வெளியிடப்பட்ட அறிக்கையில் ஒரு சுவாரசியமான தகவல் இடம்பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆண் பெண் இருபாலரிடமும் மிகப்பெரிய வேறுபாடு இருந்தது. மாணவிகளை விட மாணவர்களே கணிதத்தில் மிகவும் கில்லாடியாக இருந்தனர். ஆனால் தற்போது அந்த வேறுபாடு மாறியுள்ளது.

பெண்கள் கணிதத்தில் புலிகளாக மாறி வருகின்றனர். கல்வியில் பெண்களின் முன்னேற்றம் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது .இந்த பாலின வேறுபாடு ஏழை நாடுகளிலும் கூட மறைந்து உள்ளது. ஆனால் ஒரு சில நாடுகளில் இந்த பாலின வேறுபாடு அப்படியே எதிர்மறையாக மாணவர்களை விட மாணவிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. பெண்கள் தங்களது முழு திறமையை முழுமையாக உணர்ந்து கொள்ள இன்னும் அதிகம் சிந்தித்து செயலாற்ற வேண்டும், கல்வியில் பாலின சமத்துவமின்மை அகல வேண்டும் என்று அந்த அறிக்கையில் யுனெஸ்கோ நிறுவனம் பரிந்துரை வழங்கியுள்ளது.