• Thu. Mar 28th, 2024

பட்டுப்போன பூங்கா பார்வைப்படுமா?

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய அலுவலகம் முன்பு பல சுற்றுலா பயணிகளுக்கும் பொது மக்களுக்கும் கண்களுக்கு விருந்தளித்து கம்பீரமாக காட்சியளித்து வந்த பூங்கா காட்டு விலங்குகள் அட்டகாசத்தால் பராமரிப்பு பணி தேய்வு ஏற்பட்டதாலும் பட்டுப் போய் காய்ந்த பில்களாலும் முப்புதர்களாலும் அலங்கோலமாக காட்சியளித்து வருகிறது.
மஞ்சூரில் இருந்து உதகைக்கு செல்லும் சாலை மின்வாரிய அலுவலகம் விளையாட்டு மைதானம் மற்றும் அழகிய பூங்கா நீல நிற பூக்களுடன் மரங்களும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்ற வகையில் அமைந்திருந்தது. கேரளா கர்நாடகா தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வருகை புரியும் சுற்றுலா பயணிகள் பூங்கா முன்பு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வந்தனர். இந்தப் பூங்காவில் 24 அடி உயரத்தில் இந்திய தேசிய சின்னம் அசோகச் சின்னத்தின் தூன் அமைக்கப்பட்டுள்ளது .இந்த தூணில் நான்கு ஆசியச் சிங்கங்கள் அடுத்தடுத்து நிற்கின்றன.

இவை அதிகாரம்,வீரம்,பெருமை,நம்பிக்கை ஆகிய நான்கு பண்புகளைக் குறிக்கின்றன.இவை வட்ட வடிவ பீடத்தில் நிறுவப்படுள்ளன.இந்த பீடத்தின் கிழக்கில் யானை,மேற்கில் குதிரை,தெற்கே எருது,வடக்கில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளன.இந்த பீடம் ஒரு மலர்ந்த தாமரை வடிவத்தில் அமைந்துள்ளது.மலர்ந்த தாமரை மலரும் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. காட்டெருமை பன்றி போன்றவற்றை பூங்காவில் நுழைந்து பூக்களையும் செடிகளையும் நாசப்படுத்தியதால் பூங்கா பராமரிப்பு பணியாளர்கள் இல்லாததாலும் அழகிய பூங்காவின் கவனிப்பின்றி காட்சியளிக்கின்றது சிறந்த பூங்காவிற்கான விருதுகளும் பராமரிப்பு சிறந்த மலர் என பல விருதுகளைப் பெற்ற பூங்கா மீண்டும் பூங்காவை தூய்மைப்படுத்தி சீரமைத்து பழைய நிலைமைக்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *