• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அஜித்தை இயக்கவுள்ளாரா சுதா கொங்கரா?

நடிகர் அஜித்குமார் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையும், நேர்கொண்ட பார்வை. வலிமை ஆகிய படங்களை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிப்ரான் இசையமைப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக அஜித் தனது 62-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த நிலையில், இப்படங்களை தொடர்ந்து அஜித் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடிப்பார் எனவும், ஒரு கேங்ஸ்டார் படமாக அது இருக்கும் எனவும், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து ஜிவி பிரகாஷ் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளிக்கும் போது அஜித் படம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியது “சுதா கொங்கராவும் அஜித் சாரும் இணைந்து படம் பண்ணுவாங்க..அதுக்கான நேரம் அமைய வேண்டும்.. அஜித் சாருடைய கால்ஷீட்..சுதா மேம்முடைய கால்ஷீட் சரியாக அமைந்தவுடன் படம் பண்ணுவாங்க… கண்டிப்பாக நானும் அஜித் சாரும் படம் பண்ண வாய்ப்பு இருக்கு” என கூறியுள்ளார்.