2022 ம் ஆண்டிற்கான 94 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது, ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக முதன்முறையாக ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், விழா மேடையில் தொகுப்பாளாரை கண்ணத்தில் அரைந்த சம்பவம் தான் இப்போதைய பரபரப்பு பேச்சு!
வில் ஸ்மித் மனைவியின் ஹேர் ஸ்டைலை தொகுப்பாளரும், நடிகருமான கிற்ஸ் ராக் கிண்டல் செய்தார். அதற்கு ஆஸ்கர் விருது விழா மேடையிலேயே வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை கண்ணத்தில் அடித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சர்வதேச அளவிலும் ட்ரெண்டானது. பிறகு ஆஸ்கர் விருது கிடைத்ததும், அதற்கு மன்னிப்புக் கேட்டு அதனை சரிசெய்தார். தொகுப்பாளரை கண்ணத்தில் அறைந்த வீடியோவும், விழா மேடையில் கண்கலங்கியபடி வில் ஸ்மித் பேசும் வீடியோவும் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.