பழனியைப் போல, திருப்பரங்குன்றம் மலைக்கும் ரோப்கார் வசதி செய்து தரப்படுமா என்ற கேள்விக்கு இந்துஅறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் லட்சுமி தீர்த்தம், சரவணப் பொய்கை சீரமைப்பு மற்றும் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு ரோப்கார் வசதி பற்றி சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கேட்ட கேள்விக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று ஆராயப்பட்டு வருகிறது என்று சட்டப்பேரவையில் பதில் அளித்தார்.