விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.
அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை சிவகாசியில் திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.
மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் விஜயகுமரன், விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், மச்சராஜா, தர்மலிங்கம், விருதுநகர் நகர செயலாளர் நெய்னார்முகமது, சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் கருப்பசாமி, ஆரோக்கியம், வெங்கடேஷ், லட்சுமிநாராயணன், மாநகர பகுதி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமிபாண்டியன், சரவணக்குமார், சாம்(எ)ராஜ அபினேஷ்வரன், தகவல் தொழில்நுட்ப செயலாளர் பாண்டியராஜன், பொதுக்குழு உறுப்பினர் சித்துராஜபுரம் பாலாஜி, கவுன்சிலர் ஜெகத்சிங்பிரபு, சிவகாசி மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பால்பாண்டி, சிவகாசி ஒன்றிய கழக இணை செயலாளர் இளநீர் செல்வம், பள்ளபட்டி ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர் படிவத்தை பெற்றுக்கொண்டனர்.