விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நவீன நீர்ப்பாசன முறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேற்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் நுட்ப மையம் மற்றும் அருப்புகோட்டை வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் தெற்காறு நதி உபவடி நிலப் பகுதி கிராம விவசாயிகளுக்கு நவீன நீர்ப்பாசன முறைகள் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சியில் கோயம்புத்தூர் நீர் நுட்ப மைய இயக்குனர் பழனிவேலன் மற்றும் நீர்வள நிலவளத் திட்ட பேராசிரியர் மற்றும் தலைவர் ராஜூ அலோசனை படி வேளாண் விஞ்ஞானிகள் நவீன நீர் பாசன முறைகள் பற்றியும் அதன் மேலாண்மை மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் குறித்த நிலையப் பயிற்சியும் வழங்கினர் நீர்வள நிலவள திட்டத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் இணை பேராசிரியர் முனைவர் ராஜா பாபு தண்ணீரின் அவசியம் குறித்தும் தண்ணீரின் செலவை குறித்து சாகுபடி பரப்பை அதிகரிக்கும் முறைகள் குறித்து விளக்கினார். அதனை தொடர்ந்து தொழில் நுட்ப வல்லுநர் மற்றும் உதவி பேராசிரியர் வேணுதேவன் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் தூவல் பாசனம் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்
தொடர்ந்து தீவனப் பயிர்களுக்கு தூவல் பாசன முறைகள் குறித்து இளநிலை ஆராய்ச்சியாளர் சேர்மராஜா விளக்கமளித்தார் இப்பயிற்சியில் தொழில் நுட்ப உதவியாளர் உடையப்பன் மற்றும் மாரிஸ்வரி கலந்து கொண்டனர் இந்த பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட தெற்காறு நதி உபவடி நிலபகுதி விவசாயிகள் கலந்து கொண்டு நவீன தொழில் நுட்பங்களை அறிந்து கொண்டு பயனடைந்தனர்