• Sun. Oct 18th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

போட்டியில் இருந்து விலக மாட்டேன்- சசிதரூர்

ByA.Tamilselvan

Oct 9, 2022

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியிலிருந்து விலகமாட்டேன் என சசிதரூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வருகிற 17-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சசிதரூர் எம்.பி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சசிதரூரை போட்டியில் இருந்து வாபஸ் பெற பலர் வற்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது.இந்த சூழலில் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்து விலக சசிதரூர் முடிவு செய்திருப்பதாக நேற்று தகவல்கள் வந்தன. இந்த தகவலை சசிதரூர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனக்கும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் நடப்பது நட்பு போட்டி. இதில் இருந்து நான் விலகப்போவது இல்லை. ஓட ஆரம்பித்து விட்டேன். இனி நிறுத்தப்போவதில்லை. இறுதி வரை போராடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.