கோவை, தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அடுத்த அடுக்கல் செல்லும் சாலையில் ராஜப்பன் என்பவரது தோட்டம் உள்ளது. தோட்டத்தில் வாழை, பாக்கு மரம் மற்றும் ஒரு பகுதியில் கோழி பண்ணை வைத்து தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். மற்றொரு வீட்டில் விவசாயக் கூலி வேலை செய்து வரும் குடும்பத்தினர் தங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் அட்டுக்கல் மலைப் பகுதியில் இருந்து விவசாய தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை.
அங்கு வீட்டின் அருகே பழைய வீடு உள்ளது.
அங்கு கால்நடைகளுக்கு வைத்து இருந்த தவிடு, புண்ணாக்கு மற்றும் கோழிக்கு தேவையான தீவனத்தை அங்கு வைத்து இருந்தனர்.
ஒற்றை யானை அந்த வீட்டின் கதவை உடைத்து தும்பிக்கையை கொண்டு புண்ணாக்கு, தவிடு போன்றவற்றை எடுத்து தின்று சேதப்படுத்தியது.
தோட்டத்தில் வேலைக்கு இருந்த தொழிலாளர்கள் யானையை கண்டு அதிர்ச்சியில் அலறினர். உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறையினர் ஒற்றை யானையை விரட்டினர். நீண்ட நேரம் அங்கு இருந்து செல்லாமல் நின்றது. ஒரு வழியாக சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானையை தோட்டத்தில் இருந்து விரட்டினர்.
ஒற்றை யானை அடிக்கடி கெம்பனூர், ஓணாப்பளையம் உள்ளிட்ட விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது.
மேலும் விரட்டப்பட்ட யானை தொடர்ந்து தோவராயபுரம், ஆதிநாராயணன் கோவில் அருகே முகாமிட்டு உள்ளது.
அதனை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.