• Mon. Apr 21st, 2025

நீலகிரி -பந்தலூர் அருகே காட்டு யானை மர்ம மரணம்

ByRaja

Feb 9, 2023

சேரம்பாடி வனசரகத்திற்குட்பட்ட சேரங்கோடு அடுத்துள்ள காப்பிக்காடு பகுதியில் 17.வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை மர்மமான முறையில் இறந்துள்ளது…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சேரம்பாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட சேரங்கோடு வனப்பகுதியில் 17. வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை இறந்த கிடப்பதை வேட்டைத்தடுப்பு காவளர்கள் ரோந்து பனியின் போது கண்டு ரேஞ்சர் ஜய்யனாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது ..

அதன் பின் கூடலூர் வன அலுவலர் கொம்புஹோம்காரம் அவர்களின் மேற்பார்வையில் உடல்கூறுஆய்வு சோதனை செய்யப்பட்டது. முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அவர்களின் மருத்துவ குழு .சேரம்பாடி வனசரகர் ஜயனார் தேவாலா வனசரகர் சஞ்ஜீவி மற்றும் வேட்டைத் தடுப்பு குழு அதிவிரைவு மீட்பு குழு போன்றோர்கள் உடன் இருந்தார்கள்.
இந்த காட்டு யானை இறந்து நான்கு நாட்களாகி இருக்குமெனவும் இறந்து பேனா யானை எவ்வறு இறந்தது இறப்பிற்கு என்ன காரணம் என கால்நடை மருத்துவர் ராஜேஸ் பிரேத பரிசோதனை முடிந்து அதன் உடற்கூர் ஆய்வரிக்கையில் தெரியுமென கால் நடை மருத்தவர் கூறினார்