நெல்லை வன உயிரின சரணாலயத்திற்கு உட்பட்ட சங்கரன்கோவில் வனச்சரக எல்லைக்குட்பட்ட டி.என்.புதுக்குடி கிராமத்தில் வசிப்பவர் மு.அப்துல் வஹப், தஃபெ.முகமது நாகூர் ஆகியோர், புளியங்குடி என்பவருக்கு சொந்தமான காய்கறி தோட்டத்தை சுற்றிலும் மின்வேலி அமைத்து, அதில் திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சி காட்டு மாடு ஒன்றினை வேட்டையாடியுள்ளனர். அதன் இறைச்சியை விற்பனைக்கு எடுத்துவிட்டு மீதமுள்ள தலை, கால் மற்றும் எலும்பு பாகங்களை அருகில் உள்ள ஓடைப்பகுதியில் ஆங்காங்கே வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனச்சரக அலுவலர் ஸ்டாலின் தலைமை குழு சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர். அதனடிப்படையில் தோட்டத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் முகமது நாகூர் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான நாகராஜ் என்பவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். காட்டு மாடு வன உயிரின சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படும் முக்கிய வனவிலங்கு என்பது குறிப்பிடத்தக்கது.