• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மதுப் பழக்கத்தை கைவிடாததால் 2 குழந்தைகள் உட்பட மனைவி தற்கொலை:

கடலூர் மாவட்டத்தில் கணவன் மது குடிக்கச் சென்ற விரக்தியில் மனைவி இரண்டு குழந்தைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆலடி அருகே உள்ள எடக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ் . இவர் காய்கறி சந்தை கூலித் தொழிலாளியாக உள்ளார் . மதுவிற்கு அடிமையாகி இருந்ததால் மனைவியின் வேண்டுதலை ஏற்று குடிப்பழக்கத்தை சில நாள் விட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் பாக்யராஜ் மீண்டும் மது அருந்தப் போவதாகக் கூறி, கோபுராபுரம் கிராமத்திற்குச் சென்றதால் மனமுடைந்த பாக்கியலட்சுமி, மகள் திவ்யா மற்றும் மகன் திவாகரன் ஆகிய மூவரும் தங்களது வயலில் இருந்த முந்திரி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சடலங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.