சாத்தூர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கன மழை பெய்ததது.
மேலும் சாத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளான இருக்கன்குடி, மேட்டமலை படந்தால், சத்திரப்பட்டி, ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, பெத்துரெட்டிபட்டி, சின்னதம்பியாபுரம் உள்ளிட்ட பகுதி களில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
மேலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் கிராமப்புற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து இருப்பதால் அந்த மின்சாரம் தடைப்பட்டு உள்ளது.
மேலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த பலத்த மழை காரணமாக சாத்தூர் நகர் பகுதியில் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.
மேலும் சாத்தூர் நகர் பகுதியில் சாலையோரங்களில் புதிய கால்வாய்கள் அமைத்து கற்கள் பதிக்கப்பட்டு இருந்த நிலையில் சாலையோரங்களில் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் மழைநீர் புதிய கால்வாய்களில் செல்ல முடியாமல் சாலையில் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.