
சென்னையிலிருந்து புதுவை சென்ற சொகுசு கப்பலுக்கு புதுவை அரசு அனுமதி தராதது ஏன் என்பது குறித்து புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையிலிருந்து வந்த சொகுசு கப்பலில் இருக்கும் ஒரு சில அம்சங்களுக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாகவே சென்னையிலிருந்து வந்த சொகுசு கப்பலுக்கு புதுச்சேரி மாநில அரசு அனுமதி வழங்கவில்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் சொகுசு கப்பலை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் இந்த கப்பலுக்கு புதுச்சேரி அரசு அனுமதி தரவில்லை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
