தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை வனத்துறை செயலாளர் பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக உதயன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். இவர் தற்போது வன உயிரின பாதுகாப்பு நிறுவன இயக்குநராக மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஜெயந்தி IFS நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை தீபக் பல்கி IFS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.