• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இபிஎஸ் டெல்லி சென்றது ஏன்? மருது அழகுராஜ்

ByA.Tamilselvan

Sep 21, 2022

பிரதமரை சந்திக்க திடீர் பயணமாக இபிஎஸ் டெல்லி பயணம் சென்றது கர்நாடகவில் தனது உறவினர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு தான் என்கிறார் மருது அழகுராஜ்.
பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசியுள்ளார்.இந்நிலையில் இபிஎஸ் டெல்லி பயணத்தின் உண்மை காரணம் குறித்து நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருதுஅழகுராஜ் விமர்சித்துள்ளார்.
இபிஎஸ் உறவினர்கள் மீது கர்நாடகாவில் லோக் ஆயுக்தா நீதிமன்றம் லஞ்ச வழக்கு ப்பதிவு செய்திருப்பதால்தான் இபிஎஸ் உடனடியாக டெல்லி சென்றார் என மருது அழகுராஜ் விமர்சித்துள்ளார்.கோதாவரி காவிரியை இணைக்க மனு அளிப்பதற்காக நீர்வளத்துறை அமைச்சரை அல்லவா சந்தித்திருக்க வேண்டும் என மருது கேள்வி எழுப்பியுள்ளார்.