• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

யார் இந்த மாவீரன் உத்தம் சிங்..???

ByAlaguraja Palanichamy

Aug 1, 2022

வரலாற்றில் 1919ம் ஆண்டு நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை நிகழ்த்திய பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி பிரிகேடியர் ஜெனரல் மைக்கேல் ஓ டுவயர் சுட்டுக் கொள்வதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு அதற்கான தருணத்துக்காக காத்திருந்து 1940ம் ஆண்டு தனது லட்சியத்தை நிறைவேற்றிய மாவீரன் உத்தம் சிங் தூக்கிலிடப்பட்ட தினம் இன்று ஜூலை 31. மாவீரன் பகத்சிங் அவர்களின் கொள்கையை கடைபிடித்தவர். ஆங்கிலேயரின் கடும் கண்காணிப்பை மீறி பல நாடுகள் கடந்து சோவியத் யூனியன் தங்கி பின் இங்கிலாந்து சென்று 21 ஆண்டுகள் காத்திருந்து டுவயர்யை சுட்டு கொன்றார். அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.”இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்” என்று முழங்கினர் உத்தம் சிங். ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதரம் கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டு மறைந்தார்.