• Mon. Jun 5th, 2023

திமுகவின் அடுத்த வாரிசு யார் ? குடும்ப சண்டையால் அதிரும் அறிவாலயம்

திராவிட கழகத்தில் இருந்து அண்ணா விலகி திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு கட்சியினை ஆரம்பித்தார். அண்ணாவின் மறைவிற்கு பிறகு வாரிசு என்ற முறையில் கட்சி தலைமை மாறவில்லை. அண்ணாவின் தம்பிகளாக அரசியல் அனுபவசாலிக்கு அந்த பொறுப்பு வந்து சேர்ந்தது. ஆனால் அதற்கு பிறகு வாரிசு அரசியல், குடும்ப அரசியல், குடும்ப கட்சி ,குடும்ப ஆட்சி என்ற பெரும் குற்றச்சாட்டு திராவிட முன்னேற்ற கழகத்திற்கு உண்டு. அது வயது வித்தியாசம் இன்றி குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு தான் இருக்கிறது.


இது குறித்து தொண்டர்கள் என்ன நினைப்பார்கள் ,மக்கள் என்ன நினைப்பார்கள் என்று தலைமை கவலைபாடாது என்று தான் அறிவாலயத்தின் மூத்த உடன்பிறப்புகள் கூறுகின்றனர். கலைஞர் கருணாநிதி காலத்தில் எப்படி ஸ்டாலினை வளர்த்தாரோ அதே போல தான் இப்போது உதயநிதியை திமுக வளர்த்து வருகிறது. அதற்கு முழு ஆதரவு வயது வித்தியாசம் இன்றி வழங்க வேண்டும் என்று கட்சியின் மூத்தவர்களுக்கும் வழங்கப்பட்டது. அதனால சமீபத்தில் ஒன்று சேர்ந்தார் போல உதயநிதியை அமைச்சர் ஆக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.


சமூக நீதி பேசும் கட்சி, சுயமரியாதை போற்றும் கட்சி இப்படி நடந்து கொள்ளலாமா ? என்று மக்களும் தொண்டர்களும் கேட்டால் தலைமை அதற்கு பதில் கூறாது. காரணம் அதற்கு பதில் கிடையாது. இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல காலம் காலமாக நடந்து தான் வருகிறது. கட்சி ஜனநாயகம் என ஒன்று உள்ளதை மறந்துவிட்டனர் வாரிசுதாரர் என்ற முறையை அரசியலில் திமுகவினர் நியாயபடுத்துகின்றனர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


திமுகவின் கட்சி நிர்வாகிகள் நியமனத்தின் போது சமூக நீதி தாக்கப்பட்டது. ஆம், இன்று திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஆ.ராசாவிற்கு பொறுப்பு கொடுக்க திமுக தலைமை தயங்கியது. அதனை அன்று இந்து நாளிதழில் கட்டுரையாக வெளி வந்து அறிவாலயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு தான் தற்போதைய அமைச்சர் பொன்முடியுடன் சேர்த்து ஆ.ராசாவையும் திமுக பொதுச்செயலாளராக 2020 ம் ஆண்டு செப்டம்பர் திமுக தலைமை அறிவித்தது.


அதற்கு பிறகு பிரச்சனையை ஏற்படுத்தியது உதயநிதி மற்றும் சபரீசன். திமுகவின் வெற்றி முழுவதுமாக ஒருவரை சேரும் என்றால் அது நிழல் உலக முதலமைச்சர் சபரீசனை தான் கட்சியினரே கூறுவர். கட்சிக்கு ஒருவர் ஆட்சிக்கு ஒருவர் என்று தனி ரூட்டில் சென்று கொண்டிருதனர். அப்படி இருக்க அவ்வப்போது உட்கட்சி மோதல் வெடித்துகொண்டிருக்கும் போது, இப்போது புதுசாக ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. அது குறித்து தான் அறிவாலயமே பேசிக்கொண்டிருக்கிறது.


திமுகவில் இளைஞரணியை கட்டமைக்க வேண்டும் என்று திமுக தலைமையில் உதயநிதிக்கு உத்தரவிட்டுள்ளதால், அதில் தற்போது இளைஞரணியை வலுப்படுத்த செந்தில் பாலாஜியை கையில் வைத்து கொண்டு ஸ்கெட்ச் போட்டு செயல்படுத்தி வருகின்றனர். இதில் புதிதாக திமுக எம்.பி கனிமொழி ஒரு சுற்றறிக்கையை ட்விட்டரில், காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இளைஞரணியில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மகளிரணியை கட்டமைக்க வேண்டும்.திராவிட கொள்கைகளை இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். எதிலும் தலையீடு இல்லாத திமுக எம் பி கனிமொழியின் இந்த திடீர் சுற்றறிக்கை சற்று யோசிக்க கூடியது தான் , அதே நேரத்தில் தனக்கான பங்கு என்ன என்றும் மறைமுகமாக கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழகத்தில் ஜெயலலிதாவை தவிர்த்து எந்த கட்சிக்கும் பெண் தலைமை கிடையாது.சசிகலாவும் , பிரேமலதாவும் அந்த சாதனையை முறியடிக்க போராடுகின்றனர். ஆனால் அதற்கு எந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது நமக்கு தெரியாது. ஆனால் திமுகவை பொறுத்தவரை சமூக நீதி பெண் விடுதலை பெண் அடிமைத்தனம் பேசக்கூடிய கூடிய கட்சியில் இதுவரை தலைமை இடத்தை பெண்கள் பெற்றது கிடையாது. அப்படி இருக்க கனிமொழி ஆட்சி ரீதியில் எம் பி ஆக அமைக்கப்பட்டாலும் ,கட்சியில் பெரிய அளவில் பொறுப்பும் செல்வாக்கும் கிடையாது.


எனவே இப்போது உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ,அமைச்சர் என்று புகழ்ந்து வரும் திமுக அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் கனிமொழியை அதே போல பெண் தலைவர்களை கண்டு கொள்வது கிடையாது. திமுக அமைச்சரவையில் கூட 34 அமைச்சர்களில் இரண்டு பெண் அமைச்சர்கள் தான் உள்ளனர். மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் போல அனைவரும் ஆண் அமைச்சர்கள் தான். இதை எல்லாம் குறிப்பிட்டு தான் ஸ்டாலின் வாய்ஸ் இருக்கும் போதே கட்சியில் பொறுப்பை பிடித்து விட வேண்டும் என்று கனிமொழி கணக்கு போட்டுள்ளார்.


கனிமொழி போட்டுள்ள கணக்கு மனக்கணக்கா அல்லது காந்தி கணக்கா என்பதை அறிவாலய தொண்டர்கள் போல நாமும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *