• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

மாறன் டிரைலர் ரிலீஸ் செய்யப்போவது யார்?

தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் டிரைலரை யார் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என்ற தகவலை ஹாட்ஸ்டார் இன்று வெளியிட்டுள்ளது.

தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு தனுஷ் நடித்த மாறன் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கார்த்திக் நரேன் இயக்கி உள்ள இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த பிரபல ஓடிடி தளமான டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தனுஷ், பத்திரிக்கையாளராக நடித்துள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 14 ம் தேதி காதலர் தின ஸ்பெஷலாக மாளவிகா மோகனன் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அடுத்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

மாறன் படத்தின் டிரைலர் பிப்ரவரி 28 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதை யார் ரிலீஸ் செய்ய போகிறார் என்பது கண்டுபிடிக்க முடிகிறதா என்ற கேள்வியுடன் ஹாட்ஸ்டாரின் சோஷியல் மீடியா பக்கத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை பார்த்ததும் ரசிகர்கள் அனைவரும் தனுஷ் நடித்த மாறன் பட டிரைலரை சிம்பு தான் வெளியிட போகிறார் என கமெண்ட் செய்ய துவங்கினர்.

ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சிறிது நேரத்திலேயே மற்றொரு அறிவிப்பை ஹாட்ஸ்டார் வெளியிட்டது. அதில் ரசிகர்களான நீங்கள் தான் மாறன் படத்தின் டிரைலரை ரிலீஸ் செய்ய போகிறீர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாறன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கர்ணன், ஜெகமே தந்திரம், அத்ரங்கி ரே / கலாட்டா கல்யாணம் ஆகிய படங்களை தொடர்ந்து நான்காவதாக ஓடிடி.,யில் ரிலீஸ் ஆக உள்ள தனுஷ் படம் இதுவாகும்.