• Sat. Apr 20th, 2024

ரஜினி வாழ்க்கை வரலாறு இல்லை! பொழுதுபோக்கு படம்!

வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் V.பழனிவேல் தயாரிப்பில், தயாரிக்கப்பட்டுள்ள படம் ரஜினி.

சாக்லேட், பகவதி, ஏய், வாத்தியார், மாஞ்சா வேலு, மலை மலை, கில்லாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய A.வெங்கடேஷ் இந்த படத்தை இயக்குகிறார். விஜய் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக ஷெரின் நடித்துள்ளார். மற்றும் வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா மனோகர், வெனீஸ், ரங்கநாதன், மூக்குத்தி முருகன், தணிகைவேல் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்துதுள்ளார்.

படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறுகையில், திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்கி உள்ளேன். ரஜினி என்று பெயர் வைத்தவுடன் நிறைய பேர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கதையா என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இது அவருடைய கதை இல்லை நாயகன் தீவிர ரஜினி ரசிகராக வருகிறார். அதனால் தான் படத்திற்கு ரஜினி என்று தலைப்பை வைத்துள்ளோம்.

ரஜினி ரசிகரான விஜய் சத்யா
தனது வாழ்வில் எதிர்பாராத விதமாக ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார். அதனால் என்ன மாதிரியான சிக்கல்கள் வருகிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை பரபரப்பான திரைக்கதையுடன்
அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கும்படியான செண்டிமென்ட் கலந்து ஜனரஞ்ஜகமாக உருவாக்கியுள்ளோம்.

இந்த படத்தில் இடம்பெறும் “துரு துரு கண்கள்” பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அந்த பாடல் நிச்சயமாக மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகமொத்தம் ரஜினி இந்த வருடத்தின் மிக சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும்.’ என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *