• Thu. Feb 13th, 2025

வீட்டில் டீ தயாரித்த போது, சேலையில் தீ பிடித்து மூதாட்டி பலியானார்…

ByKalamegam Viswanathan

Aug 30, 2023

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே திருநகர் மகாலட்சுமி காலனியை சேர்ந்தவர் கலாவதி(வயது 74) இவர், வீட்டில் டீ போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பிடித்தது. இதில் தீயில் கருகி உயிருக்கு போராடினார். அருகில் இருந்தவர்கள் அவர்கள் முதலுதவி செய்து சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலாவதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, மகன் கோபிநாத் திருநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, மூதாட்டி கலாவதியின் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.