யுவன்ஷங்கர் ராஜாவின் தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில், விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் பலர் நடிக்கும் ‘மாமனிதன்’ படத்திற்கு தணிக்கை முடிந்து ‘யு’ சான்றிதழ்வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு முதல் முறையாக இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கின்றனர். மாமனின் படத்தின் அறிவிப்பு 2018ல் வெளியிடப்பட்டது 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படத்தை இயக்குனர் சீனுராமசாமி முடித்து கொடுத்துவிட்டார் அதன்பிறகு பல முறை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப் போனது. இந்நிலையில் படத்தின் இரண்டு பாடல்களை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டனர்.
மூன்று வாரங்களுக்கு முன்பு படத்தின் டீசரையும் வெளியிட்டார்கள். தற்போது தணிக்கை முடிந்துவிட்டதால் எப்போது வெளியிடுவது என்பதை முடிவு செய்ய முடியாத நிலைமை ஏற்கனவேவிஜய் சேதுபதி நடித்துள்ள ‘கடைசி விவசாயி, காத்து வாக்குல ரெண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர்’ ஆகிய படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன.
2021 ஜனவரியில் RRR, வலிமை, ராதேஷ்யாம், பிப்ரவரி தொடக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என பன்மொழிப்படங்கள் வெளியாக இருப்பதால் குறைந்தபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதும், வணிகரீதியாக வெற்றிபெறுவதும் எளிதான காரியமல்ல அதனால் விஜய்சேதுபதி நடித்துள்ள படங்கள் எப்போது வெளியாகும் என்பது முடிவு செய்ய முடியாத நிலை தொடர்கிறது.