• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அங்கன்வாடி மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு எப்போது?… விளக்கமளித்த அமைச்சர்…

Byமதி

Oct 16, 2021

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் வேகம் குறைந்துள்ளதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் அனைத்தும் வருகிற நவம்பர் 1ஆம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்ததாவது, பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களை துன்புறுத்தவோ, அவர்களிடம் பாகுபாடு காட்டவோ கூடாது என உத்தரவிடப்பட்டது.

இந்த விதியினை மீறும் ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் நர்சரி பள்ளி திறப்பு குறித்து வெளியான அறிவிப்பான் தவறு என்றும், குழந்தைகளுக்கான சத்துணவு வழங்குவது குறித்த ஆலோசைகள் தான் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.