தமிழகமே தற்போது பெய்து வரும் கனமழையால் வீடுகளுக்குள் அடைபட்டு கிடக்கிறது. ஆனால் இந்த கனமழையிலும் தூய்மைப் பணியாளர்கள் தங்களது பணியை செய்தால் தான், பொது மக்களாகிய நம்மால் இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்ப முடியும்.

அப்படிப்பட்ட ஒரு புகைப்படம் தான் இது. மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட ராயப்பட்டை பகுதியில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் வேலை செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் இவர்களைப் போல உழைக்கும் மக்களின் உழைப்புக்கு ஒரு சான்று. இதுபோல நூற்றுக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர்.
அவர்களை தேடி பிடிப்பது எளிதான காரியம் இல்லை. எனவே, அவர்களுக்கு நம்முடைய மரியாதையை செலுத்துவோம்.