மதுரை தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ் என்ற உயர் தர அசைவ உணவகம் உள்ளது.
மதுரையிலுள்ள தல்லாகுளத்தில் சந்திரன் மெஸ்ஸிர்க்கு இருவர் சாப்பிட சென்றுள்ளார்கள். ஒரு சாப்பாட்டின் விலை 90 ரூபாய் என்று இருந்தது. உட்கார்ந்தவர்கள் இலையை விரித்தவுடன் சாதத்தை வைத்து, இரண்டு கூட்டு, கேட்காமலே இரண்டு கோலா உருண்டைகள் வைத்துள்ளார்கள். குழம்புக்காக காத்திருந்தபோது இருவரும் சர்வரை குழம்பு கோட்டுள்ளார்கள்.குழம்பு வகைகளை வரிசையாக சொல்ல சாப்பிட்டற்கு ஊற்றும் குழம்பையே கேட்டுள்ளனர் அவ்விருவரும் …அதற்கு நீங்க தனியா தான் காசு கொடுத்து வாங்கனும் என்று சர்வர் சொல்லவே அதிர்ச்சியில் திகைத்து போனார்கள்.அப்போ 90ரூபாய் வெறும் சாப்பாட்டிற்குதானா என வாயை பிளந்து நின்றுள்ளார்கள்.சரி என்று 140ரூபாய் காசு கொடுத்து அதையும் வாங்கியுள்ளனர்.அதிலும் ஒரு பாக்கட் ஒருவருக்கு தானாம்..சற்று அமைதியாக இருந்து விட்டு வேறு வழியில்லாமல் இன்னொரு குழம்பை ஆர்டர் செய்துள்ளனர். இருவரும் வயித்தெறிச்சலோடு சாப்பிட்டு முடித்தவுடன் 480 ரூபாய் பில்லை நீட்டியவுடன் திகைத்து போன இருவரும் ஆதங்கத்தை னரிடம் காட்டியபோது இப்படித்தான் என்று அலட்சியமாக கூறியுள்ளார்.
இவர்கள் இத்தகைய உணவகம் பற்றி மக்கள் அறிவதற்காக தங்களது அனுபவத்தை அவர்களது பேஸ்புக்கில் பதிவிட்ட அவர்களது குமுறுல்களை பதிவிட்டுள்ளனர்.