• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மேற்கு வங்காள முதல்வர் அலுவலகத்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு!..

Byமதி

Oct 13, 2021

கொல்கத்தாவில் உள்ள ‘நாபன்னா’ எனப்படும் மாநில தலைமைச்செயலகம் அமைந்திருக்கிறது. இங்கு முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இந்தநிலையில், துர்கா பூஜை விடுமுறை காரணமாக தலைமைச்செயலகம் நேற்று மூடப்பட்டிருந்தது. அப்போது தலைமைச் செயலகத்தின் 14-வது மாடியில் நேற்று பகல் 12 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடன் 4 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. தொலைபேசி கோபுர சாதனத்தில் இருந்து தீ பற்றியிருக்கிறது என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.