• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா..,

ByKalamegam Viswanathan

Mar 2, 2026

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கேசம்பட்டியின் பாரதிதாசன் அகாடமியின் 6-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. பாரதிதாசன் அகாடமி தாளாளர் சி.ஜீவா வரவேற்புரையாற்றினார்.

மாணவ,மாணவியர்களின் சிலம்பாட்டம்,பேச்சுரை,கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தமிழர் மக்கள் இயக்கம் தலைமைக்குழு உறுப்பினர் தங்கம் அடைக்கன்,நாம் தமிழர் கட்சியின் மேலூர் தொகுதி தலைவர் சாமிக்கண்ணு, மரபு செயற்பாட்டாளர் குமார்,சமூக செயற்பாட்டாளர் தேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாணவ,மாணவியர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. பாரதிதாசன் அகாடமி செயலாளர் பாவலர் சி.சூர்யா நன்றியுரையாற்றினார்.