சாத்தூரில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, ஏழை, எளிய மக்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77வது பிறந்த தினத்தை அதிமுகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் உள்ள அண்ணா நகர் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 77ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, முன்னாள் நகரச் செயல்ளார் இளங்கோ தலைமையில் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர செயலாளர் இளங்கோ ஜெயலலிதா புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இளங்கோவன் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். பின்னர் ஏழை எளியவர்களுக்கு வேஷ்டி, சேலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், சிறுவர்களுக்கும் டிபன் பாக்ஸ் போன்றவற்றை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கவுன்சிலர் கண்ணன், வார்டு கவுன்சிலர் மற்றும் நகரக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.







