புதுச்சேரி நல உதவி குழுமம் மற்றும் பாண்டிச்சேரி அசோசியேசன் சோசியல் சர்வீஸ் சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சுமார் 600- க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி நலஉதவி குழுமம் புதுச்சேரி மற்றும் பாண்டிச்சேரி அசோசியேஷன் சோசியல் சர்வீஸ் இணைந்து புனிதமிக்க ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 15 ஆண்டுகளாக ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி 16-ம் ஆண்டான இன்று ஏழை எளிய மக்களுக்கு சுமார்600 மேற்பட்ட நபர்களுக்கு நலப்பணி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியானது வக்பு வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போக்குவரத்து காவல்துறை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் திரிபாதி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர், வக்பு அதிகாரி மற்றும் மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், அருட்தந்தை அந்தோணிசாமி அடிகளார் குழுக்கள் கார்த்திகேயன், ஆகியோர் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்,
இந்த நிகழ்வில் வக்பு வாரியஉறுப்பினர்கள், பள்ளிவாசல் முத்தவல்லிகள், மதகுருமார்கள், தர்கா முத்தவல்லிகள்,மருத்துவர்கள்,சமூக ஆர்வாலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













; ?>)
; ?>)
; ?>)