• Tue. Apr 22nd, 2025

பழ வியாபார பெண்ணிடம், மர்ம நபர்கள் வாழைப்பழ சீப் பறிப்பு

ByB. Sakthivel

Mar 22, 2025

புதுச்சேரியில் தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்த பெண்ணிடம், பைக்கில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் வாழைப்பழம் சீப்பை பறித்து செல்லும் பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகின.

புதுச்சேரி அண்ணா சாலை ராஜா திரையரங்கம் அருகே தள்ளு வண்டியில் பழம் வியாபாரம் செய்து வருபவர் ராஜாமணி இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 11:30 மணி அளவில் வாழைப்பழம் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் மின்னல் வேகத்தில் தள்ளு வண்டியில் இருந்த வாழைப்பழம் சீப்பை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து இதுவரை பெரியகடை காவல் நிலையத்திற்கு புகார் ஏதும் கொடுக்கப்படாததால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.