கோவை, மதுக்கரை அருகே பழங்குடியினர் உண்டு உறைவிட அரசு பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளையினர் வழங்குகின்றனர்.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை வட்டாரத்திற்கு உட்பட்ட மாவுத்தம்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் 32 மாணவ – மாணவிகளுக்கு கல்வி பயில தேவையான எழுத்து பொருள்கள், திருக்குறள் புத்தகம், வரைதல் புத்தகம், ஸ்கெட்ச், பேனா, அகராதி, டிபன் பாக்ஸ், குடிநீர் பாட்டில்கள் வழங்கி உள்ளனர்.
மேலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறள் புத்தகம் அகராதி மற்றும் வரைதல் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது இதை பயன்படுத்தி குறைந்தது 50 திருக்குறள் பார்க்காமல் கூற வேண்டும் என்றும் குறைந்தது 50 ஆங்கில வார்த்தைகளுக்கு தமிழ் அர்த்தம் கூற வேண்டும் மற்றும் தனது வரைதல் திறமையை மேம்படுத்த வரைதல் புத்தகத்துடன் ஸ்கெட்ச் பேனல் ஸ்கெட்ச் பென்சில் போன்ற பொருட்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.

நன்றாக வரைந்து கொடுக்கும் மாணவர்களுக்கு சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் பயிற்சி எடுப்பதற்காக இரண்டு மாத காலாவதாகசம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வாகும் மாணவர்கள் 2026 ஜனவரி மாதம் நினைவு பரிசு கொடுக்க உள்ளதாக சரோஜினி அம்மாள் நினைவு அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் மருதாச்சல மூர்த்தி, தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கார்த்திக், துணைத் தலைவர் சண்முகம், பொருளாளர் ரமேஷ், துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.







; ?>)
; ?>)
; ?>)