• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஆவின் இனிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு..!

Byவிஷா

Oct 27, 2021

ஆவின் மூலம் கடந்த 26 நாட்களில் சுமார் 22 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் ஆவின் விற்பனையை அதிகரிக்க இந்த ஆண்டு புதிய வகை இனிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


அந்த வகையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் நேற்று வரை 22 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு ஆவின் இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துத்துறை சார்பில் மூன்று கோடி ரூபாய்க்கு 70 டன் இனிப்புகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு ஆவின் மூலம் 19 கோடி ரூபாய்க்கு மட்டுமே இனிப்புகள் விற்பனையாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே 22 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனையாகி மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.