நடிகர் அஜித் தார் பாலைவனத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
தல அஜித் வலிமை படத்தை முடித்த கையுடன் வடஇந்தியாவை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார். தாஜ்மகால், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லை என இவர் செல்லும் இடங்களில் எல்லாம் இவரது ரசிகர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வைரலாக்கி வருகின்றனர்.
அந்தவகையில், தார் பாலைவனத்தில் இவர் இருக்கும் போட்டோ தான் தற்போதைய டிரெண்டிங். இந்த நிலையில், தற்போது அஜித் ராஜஸ்தானிலுள்ள தார் பாலைவனத்தில் பைக்கின் நிழலில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள், தார் பாலைவனம் அருகிலுள்ள லுனி ஆற்றின் பாறை முனையில் நின்றிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.