
கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் அதிகாரிகளாக வெற்றி பெற பயிற்சி வகுப்புகளையும் நடத்த தயாராக உள்ளார்.
மதுரை திருமங்கலம் தாலுகா, சாத்தங்குடி கிராமத்தை பூர்விகமாக கொண்ட லெப்டினன்ட கர்னல் சுரேஷ் இவர் தனது 20-வது வயதில் 2004 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற ராணுவ ஆள் சேர்ப்பு “Nursing Assistant” எனும் பணியில் சேர்ந்தார்.

தொடர்ந்து ராணுவத்தில் அதிகாரியாக தேர்வு முறைகளை கண்டறிந்து ஐந்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள் மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில் 5 ஆண்டுகள் தனது துறை சார்ந்த பணிகளையும் மேற்கொண்டு SSB எனப்படும் இராணுவ அதிகாரி தேர்வில் 2010 ஆம் ஆண்டு AMC எனப்படும் மருத்துவப் பிரிவில் சுமார் 6000 பேர் இந்த அதிகாரி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 5 நாட்கள் அலகாபாத் அதிகாரிகள் தேர்வு மையத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்வு முறைகளுக்கு பின் இறுதியாக தேர்வு செய்யப்பட்ட 20 பேர்களில் ஒரு தமிழனாக தேர்வு செய்யப்பட்டார். லெப்டினட்,கேப்டன், மேஜர் லெப்டினட் கர்னல் ஆக பதவி வகித்துள்ளார்.
மேலும் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், லக்னோவில் நடைபெற்ற பயிற்சியில் சிறந்த அதிகாரியாகவும், Drill போட்டியில் முதலிடத்தையும் அணிவகுப்பில் வழிநடத்தும் Parade Commander ஆகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

அதன்பின் பரேலி(உத்திரப்பிரதேசம்), சூரத்கர்(ராஜஸ்தான்), கல்கத்தா(மேற்கு வங்காளம்), பெரோஷ்பூர்(பஞ்சாப்), வெலிங்டன்(தமிழ்நாடு) தற்போது மணிப்பூரில் பணியாற்றி தற்போது லெப்டினன்ட் கர்னல் ஆக பதவி வகித்து வருகிறார்.
கைப்பந்து போட்டியில் “Command” அளவில் இருமுறையும் பங்கேற்றுள்ளார். இந்தியா – ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி, MFFR எனப்படும் பயிற்சி தளத்தில் நடைபெற்ற போது இந்திய அணியின் கேப்டன்-ஆக செயல்பட்டு ரஷ்ய அணியை வெற்றி பெற்றார் இதற்காக இவரைப் பெருமைப்படுத்தும் விதமாக இவரின் புகைப்படம் லக்னோவில் உள்ள AMC Museum-ல் வைக்கப்பட்டுள்ளது ஒரு தமிழனாக பெருமைப்படுவதாக தெரிவித்தார்.
Lt.Col சுரேஷ் விடுமுறையில் மதுரைக்கு வரும் பொழுதும் பள்ளி மற்றும் கல்லுரிகளில் விழாக்களில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும் விதைத்து வருகிறார்.
பல்வேறு மாணவர்களுக்கு SSB எனப்படும் இராணுவ அதிகாரிகளுக்கான தேர்வு முறைக்கு தனிப்பட்ட முறையில் பயிற்ச்சியும் அளித்து வருகிறார்.
